மிதுன ராசி அன்பர்களே….

இந்த நாளில் மற்றவர்களின் புகழ்ச்சிக்கு நீங்கள் மயங்கமாட்டீர்கள். தெய்வீக காரிய ஈடுபாட்டால் அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். மனைவியின் உதவி கிடைக்கும். புனித பயணங்களால் இன்பம் அதிகரிக்கும். பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை சாமர்த்தியத்தால் வெற்றியாக மாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். திருமண சுப காரியங்கள் நடக்க உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

தாயிடம் நீங்கள் முன் கோபம் கொள்ள வேண்டாம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள பாருங்கள். மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். தன வரவு சீராக இருக்கும். எதிர்ப்புகள் விலகும் தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். வாக்கு வன்மையால் நன்மை நடக்கும். அனுகூலமான சூழல் உள்ளது. பெண்கள் இன்று ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.

எதையும் யோசித்து செய்யும் பட்சத்தில் வெற்றி கிடைக்கும். எந்த குழப்பமும் இல்லாமல் இல்லத்தை நல்ல முறையாக பார்த்துக் கொள்வீர்கள். உத்தியோகம் செல்லும் பெண்கள் இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். காதலைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. மாலை நேரம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுங்கள். கல்வியில் அக்கறையுடன் இருங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகும். தயவு செய்து சக நண்பர்களை அனுசரித்து செல்ல பாருங்கள்.

கோபம் கொள்ள வேண்டாம். லட்சிய நோக்குடன் கல்வியை அமைத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதே போன்று காலையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்