கடக ராசி அன்பர்களே….

நீங்கள் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். அதை நினைத்து பயப்பட வேண்டாம். நல்ல காரியங்களை சிறப்புடன் செய்ய பாருங்கள். கிரக நிலையில் உங்களுக்கு மாற்றங்கள் ஏதேனும் இருந்தாலும் கூட நல்ல மனதுடையவர்கள் மன அமைதி கொண்டவர்களுக்கு ஓரளவுக்கு எல்லாம் சாத்தியப்படும். அதனால் புரிந்துகொண்டு சூழ்நிலை அறிந்து கொண்டு செயல்படுங்கள்.

தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள் பணவரவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பால் முன்னேறி செல்வீர்கள். உற்பத்தி கண்டிப்பாக பெருகக்கூடும். தொழிலும் விருத்தியாகும். லாபம் சீராக வரக்கூடும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபட பாருங்கள் இன்று குடும்பத்தில் கண்டிப்பாக அமைதி ஏற்படும்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலை ஏற்பட்டு சரியாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். புதிதாக செய்யும் செயல்களில் கவனமாக இருங்கள். இனிமையான வார்த்தைகள் பேசுவதன் மூலம் மதிப்பு கூடும். செலவுகளை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் மூலம் மன சங்கடம் ஏற்பட்டு சரியாகும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.

சிலருக்கு வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. இன்னும் சிலருக்கு தொழில் மாற்றம் ஏற்படக்கூடும். காதலைப் பொறுத்தவரை பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. காதலை நினைத்து வருத்தப்பட வேண்டாம். அதற்கென்று நேரத்தை செலவிட வேண்டாம். இ‌ன்று பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் இருக்கட்டும். கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனமாக இருக்கவும். குழம்பி போகாமல் எதையும் யோசித்து செய்வது நல்லது. இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள்.

மனதிற்குள் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். கல்வி பற்றிய அக்கறை மேலூங்கும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த விடுமுறை நாளை கல்விக்காக பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று காலையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்