சிம்ம ராசி அன்பர்களே….

இந்த நாள் மகிழ்ச்சி மிக்க நாளாக அமையும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட சறுக்கல்கள் சரியாகிவிடும். ஆனாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிக்கு வழிவகுக்கும் தன்னம்பிக்கையை மட்டும் எப்போதும் கைவிட்டு விட வேண்டாம். பழைய கடன்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிறுக சிறுக சேமித்த பணம் செலவுக்கு பயன்படும்.

மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி வரும். திடீர் பண தேவை ஏற்படும் சூழல் உருவாகும். வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனமாக இருங்கள். இடம் பூமி வாங்கும் போது கொஞ்சம் திட்டமிட்டு வாங்குங்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளரை தக்கவைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் மதிப்பு மரியாதையும் கண்டிப்பாக கூடும். பொன், பொருள் சேர்க்க இன்று வாய்ப்பு உருவாகும். காதலைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. சமாளித்து வெற்றி பெற முடியும். காதல் அடுத்த கட்ட நகர்விற்கு செல்லக்கூடும். இன்று மாணவர்கள் தனித்து எதையும் செய்வீர்கள். கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். விளையாட்டு துறையிலும் சாதிப்பீர்கள். சக நண்பர்களை மட்டும் அனுசரித்து செல்லுங்கள்.

மிக முக்கியமாக தாய், தந்தையாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் வேண்டும். புத்தி கூர்மையை வெளிப்படுத்த வேண்டும். பணி சுமை கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இள மஞ்சள் நிறத்தில் ஆடை அணியுங்கள். இள மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று காலையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2, 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள் மற்றும் சிவப்பு