குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில், அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரே கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்ஷிதா ஷெட்டி என்ற அந்தப் பெண், கடையில் சேல்ஸ் கேர்ளாகப் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிக்கொண்டு திடீரென மாயமாகியுள்ளார். இந்தத் துணிகரமான திருட்டுச் சம்பவம் நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.
தற்போது போலீசார் அந்தப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு ஊழியரே இவ்வளவு பெரிய தொகையிலான நகைகளைத் திருடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
