நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அணி தடுமாறி வரும் நிலையில், காயத்தால் விலகியிருந்த தோனி வரும் 11-ம் தேதி டெல்லிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியில் தோனியின் வருகை சென்னை அணியின் தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, சென்னை அணியின் தோல்விகளை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

சிஎஸ்கே ரசிகர் ஒருவர் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ஜாலியாகப் பதிலளித்த பீட்டர்சன் தயவுசெய்து என்னை நியமியுங்கள், மாலத்தீவு சென்னைக்கு பக்கத்தில்தான் இருக்கிறது, எனக்கு வர வசதியாக இருக்கும்” என கமெண்ட் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு ஆலோசகராக இருந்தபோது பாதியிலேயே மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சர்ச்சையைத் தானே கிண்டல் செய்யும் வகையில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.