19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் 11-ம் தேதி டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணி தனது அடுத்த போட்டியில் விளையாட உள்ளதுதொடர் தோல்விகள் குறித்துப் பேசிய சென்னை அணியின் வீரர் ஷிவம் துபே, “நாங்கள் மூன்று போட்டிகளில் தோற்றுவிட்டது உண்மைதான், ஆனால் இதற்கு முன்பு நாங்கள் வரிசையாகப் பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தற்போது துரதிர்ஷ்டவசமாகத் தோல்வியடைந்துள்ளோம், ஆனால் நாங்கள் நிச்சயம் வலிமையுடன் மீண்டு வருவோம். சென்னை அணியின் அந்த அதிரடியான ஆட்டத்தை விரைவில் அனைவரும் பார்ப்பீர்கள்,” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.