இந்தியாவில் 19-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வருகைதான்.

காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக, தொடரின் ஆரம்பகட்டப் போட்டிகளில் விளையாட முடியாமல் அவர் ஓய்வில் இருந்தார். தனது அதிரடி ஆட்டத்தைக் காணக் காத்திருந்த ரசிகர்களுக்கு, தோனியின் இந்த விலகல் ஏற்கனவே பெரும் ஏமாற்றத்தைத் தந்திருந்தது.

இந்நிலையில், வரும் 11-ம் தேதி டெல்லிஅணிக்கு எதிராக நடைபெறவுள்ள முக்கியப் போட்டியிலாவது தோனி களமிறங்குவார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போதைய தகவலின்படி தோனி அந்தப் போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

காயத்திலிருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால், டெல்லிக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்ற செய்தி சென்னை ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் சென்னை அணி, தோனி இல்லாமல் அடுத்த போட்டியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கவலையும் எழுந்துள்ளது.