தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நேரு பூங்கா அருகில் உள்ள மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி வீரர்கள் அதற்கான விண்ணப்பம் மற்றும் எந்த வகை போட்டிகள் என்ற விவரங்களை பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிநபர், குழு போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம். இது குறித்து கூடுதல் விவரங்களை அறிய 9600193366, 9566116271 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.