இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே அலுவலகம் தற்போது புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஜார்கண்ட் மாநிலம் தன் பாத் கோவை சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தன்பாத் மற்றும் கோவை இடையிலான வாராந்திர சிறப்பு முறையில் (எண் 03357), தன்பாத்தில் இருந்து இன்று  பிப்ரவரி 5ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 4 மணிக்கு கோவை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது