ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் மார்ச் 18 ஆம் தேதி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் விலை 1700 ரூபாயிலிருந்து 7,500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என சிஎஸ்கே நிர்வாக எச்சரித்துள்ளது.