நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு திமுக காணாமல் போய்விடும் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வலுவான கூட்டணியைக் கண்டு முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டதாகக் கூறினார்.

தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 23-ம் தேதி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், அமைச்சர் கே.என்.நேரு மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காததன் மூலம் முதல்வர் ஊழலுக்குத் துணை போவது தெளிவாகத் தெரிவதாகவும், பிரதமர் மோடியின் தலைமையில் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாடும் முன்னேறி வருவதாகவும் எல்.முருகன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.