சின்னத்திரை மூலம் வெள்ளி திரைக்குள் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் டேனியல் பாலாஜி. இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.