சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகம் சிலரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது.

தனது மாமியார் இறந்துவிட்ட நிலையில், அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு பெண் ஒருவர் அழுது கொண்டே ரீடு  எடுக்கும் காட்சி இணையவாசிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், “என் மாமியார் என்னை விட்டுச் சென்றுவிட்டார், இனி நான் யாருடன் சேர்ந்து வீடியோ எடுப்பேன்?” என்று அந்தப் பெண் அழுதபடி கூறுகிறார். துக்கமான சூழலிலும் கேமராவிற்கு ஏற்றவாறு அவர் கொடுக்கும் முகபாவனைகள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையத்தில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. பலரும் அந்தப் பெண்ணின் செயலை “மனிதாபிமானமற்றது” என்றும், “லைக்ஸ் வாங்குவதற்காக மனித உணர்வுகளைக் கூட அடகு வைத்துவிட்டார்கள்” என்றும் சாடி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mamta Devi (@mamta.ji.9615566)

“>

உண்மையான துக்கத்தை விட, சமூக வலைதளங்களுக்கான ‘கண்டெண்ட்’  தான் முக்கியம் என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்களா எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ரீல்ஸ் கலாச்சாரம் மக்களின் தனிப்பட்ட உணர்வுகளைச் சிதைத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.