ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ஷெரீப் தர்காவில் உள்ள மிகப்பெரிய அண்டாவிற்குள் இளைஞர் ஒருவர் திடீரென குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்கா வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

அங்கு திரண்டிருந்தவர்கள் அந்த இளைஞரைத் தடுக்க முயன்றும், அவர் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று காணிக்கை பணம் மற்றும் நகைகள் வைக்கப்பட்டிருந்த அந்த ராட்சத அண்டாவிற்குள் குதித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

உடனடியாகச் செயல்பட்ட தர்கா ஊழியர்கள், கடும் போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞரை அண்டாவிற்குள் இருந்து வெளியே மீட்டனர். அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், இளைஞரை மீட்கும் போது ஊழியர்கள் அவரைத் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“>

 

இதுகுறித்து தர்கா கமிட்டியும் காவல்துறையினரும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.