உத்தரப் பிரதேசத்தில் மாமனார் இறந்த துக்கம் தாளாமல், மருமகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் மூத்தவரான மாமனார் மீது மிகுந்த மதிப்பும் பாசமும் கொண்டிருந்த அந்தப் பெண், அவர் மறைந்த செய்தியைக் கேட்டதில் இருந்து மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
மேலும் துக்கம் தாங்க முடியாமல் உணவைத் தவிர்த்து வந்தவர், இறுதியில் விஷம் அருந்தி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மாமியார் – மருமகள் சண்டைகள் குறித்து செய்திகள் வெளியாகும் நிலையில், இது போன்ற சோகங்கள் நடக்கிறது.
இந்நிலையில் தந்தை போன்ற மாமனார் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் ஒரு மருமகள் உயிரை விட்டது நெகிழ்ச்சியையும் வேதனையையும் ஒருசேர அளிக்கிறது. தற்போது காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
