தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த திரிஷா நடித்திருந்த நிலையில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் முதல் நாளில் லியோ திரைப்படம் 148 கோடி வசூல் செய்த நிலையில் 7வது நாளில் 461 கோடி, 12 நாளில் 540 கோடி என வசூலை குவித்து வந்த நிலையில் கேரளாவில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை லியோ திரைப்படம் அடைந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளனர்.