விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “விஜய், அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில்தான் செயல்பட்டு வருகிறார். அவர் அரசியலுக்கு வரட்டும். ஆனால், முன்னதாக அதற்கான கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

அரசியல் என்பது அனைவருக்கும் சவாலானது. அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களே அரசியலுக்குள் வர விரும்புகிறார்கள் என தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.