தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த திரிஷா நடித்திருந்த நிலையில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சில தினங்களுக்கு முன்னதாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் விஜய் பேசிய சில கருத்துக்கள் இன்றும் இணையத்தில் விவாதம் ஆகி வருகின்றது. இந்த விழாவில் எடுத்த புகைப்படங்களை விஜய் தற்போது தனது இன்ஸ்டால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை இணையத்தில் ரசிகர்கள் அதிக அளவு பகிர்ந்து வருவதோடு கமெண்டில் அன்பு மழையை பொழிந்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actorvijay)