சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் வரையில் சவரனுக்கு அதிகரித்துள்ளது.
இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,15,080 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14385 ரூபாய் க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15693 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,25,544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இன்று வெள்ளி விலை இன்ப அதிர்ச்சியாக கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய் க்கும் விற்பனையாகிறது.
