பஞ்சாப் அரசு செய்த சிறிய தவறால், உதவித்தொகை தொகை ரூ.3 கோடி மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சுமார் 24 ஆயிரம் பேரின் கணக்கில் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணத்தை மீட்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2022-23 கல்வி ஆண்டுக்கு செலுத்த வேண்டியதை விட ரூ.3 கோடி அதிகமாக டெபாசிட் செய்துள்ளது அரசு. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நடந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அக்டோபர் 30ஆம் தேதிக்குள் பணத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.