நாடு முழுவதும் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம். தற்போதைய முக அங்கீகார தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயிர் சான்றிதழ் அறிமுகப்பட்டது.  ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலமாகவோ அல்லது வங்கிக்  கிளைகள்  நேரில் சென்றோ அந்த சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் அல்லது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஓய்வூதியதாரர்ர்களிடம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று உயிர் சான்றிதழை பெறும் விதமாக ஊழியர் ஒருவரை வங்கியில் நியமிக்க வேண்டும் என்றும் அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுதியதாரர்கள் எளிதில் உயிர் சான்றிதழ் சமர்ப்பிக்கும் விதமாக நிலையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.