தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள  நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சேர விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் பிஇ, பிடெக் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டதாக காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி தெரிவித்துள்ளது.

பாலிடெக்னிக், பிஎஸ்சி கணிதம் முடித்த மாணவர்கள் பிஇ, பிடெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம். இதற்கான விண்ணப்பிக்க ஜூன் 30-ம் தேதி கடைசி நாள் என இருந்த நிலையில், ஜூலை 7-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது.