உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பரௌலி கிராமத்தில், நள்ளிரவில் கணவனைத் தவிக்கவிட்டு, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளுடன் மனைவி திடீரென ஓட்டம் பிடித்த வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் போனில் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை அவரது கணவர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே வீட்டில் பயங்கரக் குடும்பச் சண்டை வெடித்த நிலையில், ஆத்திரமடைந்த மனைவி நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
அவர் சும்மா போகாமல், வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ₹10,000 ரொக்கப் பணம் மற்றும் விலைமதிப்பற்ற தங்க, வெள்ளி நகைகளையும் அள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார் என்று கணவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் நள்ளிரவில் கையில் பெரிய பையுடன் நைசாக வீட்டிலிருந்து வெளியேறி ஓடும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
தற்போது அந்த சிசிடிவி ஆதாரத்தை வைத்து சாத் நகரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
