புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 12 இடங்களைப் பிடித்து, ரங்கசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, மணவெளி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராம், சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்க மேடைக்கு வந்தார்.
புது கடவுள் விஜய்
கடுப்பான சபாநாயகர் 😁
❗#tvk ❗#tvkvijay ❗#vijay ❗#tvkfails ❗#tvkparty ❗ pic.twitter.com/zS86GzyqVF
— அழகை ரிபாய் (@ALAGAIRIFAI) May 20, 2026
அவர் திடீரென தனது கட்சித் தலைவர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, அவரை “கடவுள்” என்று குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினார். இதற்கு உடனடியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் அன்பழகன், விஜய் குறித்து அவர் பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், “ஏற்கனவே 1008 கடவுள்கள் இருக்கிறார்கள், இவர் என்ன 1009-ஆவதா? இனிமேல் அவையில் யாரும் இதுபோல் செய்யக்கூடாது” என எச்சரித்ததால் புதுச்சேரி சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
