டெல்லி தெருக்களில் விற்கப்படும் ‘கொண்டைக்கடலை மசாலா’ (Chole Kulche) உணவை நாம் சாதாரணமாகக் கடந்திருப்போம். ஆனால், ஒரு சாதாரண தள்ளுவண்டி கடைக்காரர் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் வீடியோவாக வெளியிட, அது இப்போது இணையத்தையே அதிர வைத்துள்ளது.
அந்த கடைக்காரருடன் நாள் முழுவதும் இருந்து அவரது வியாபாரத்தைக் கணக்கிட்டதில், ஒரு நாளில் மட்டும் சுமார் 330 தட்டுகள் விற்பனையாகியுள்ளது தெரியவந்தது.
View this post on Instagram
ஒரு தட்டு 40 ரூபாய் வீதம், அன்றைய மொத்த வருமானம் 13,000 ரூபாயைத் தொட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், மூலப்பொருட்கள், எரிவாயு மற்றும் வண்டி வாடகை என அனைத்துச் செலவுகளும் போக ஒரு நாளைக்கு மட்டும் அவருக்கு 8,500 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்கிறது.
இந்தக் கணக்கின்படி பார்த்தால், ஒரு மாதத்திற்கு அவரது லாபம் மட்டும் சுமார் 2.55 லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது. பெரிய ஐடி நிறுவனங்களில் மேலாளர் பதவியில் இருப்பவர்களுக்குக் கூட இவ்வளவு சம்பளம் கிடைப்பது அரிது என்பதால், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் “ஐடி வேலையை விட்டுவிட்டு குல்ச்சே கடை போடலாமா?” என்று வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
“எந்த வேலையும் குறைவானது அல்ல, உழைப்பும் சுவையும் இருந்தால் தெருவோரக் கடையிலும் லட்சாதிபதி ஆகலாம்” என்பதற்கு இந்தச் செய்தி ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
