2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கும் அதற்கு பதிலாக முஸ்லிம்கள் விரும்பும் பகுதியில் 5 ஏக்கர் நிலம் மசூதி கட்டுவதற்காக கொடுக்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை இஸ்லாமியர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார்கள். அதன்படி தானிப்பூர் என்ற இடத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் தனி இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நிலத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக நூலகம், மருத்துவமனை, மியூசியம் போன்றவைகள் உள்ளடங்கிய மசூதியை கட்ட இஸ்லாமியர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த மசூதியின் பெயர் மஸ்ஜித் முஹம்மத் பின் அப்துல்லா என்றும் மசூதி கட்டுமானம் ரமலான் மாதத்திற்கு பிறகு தொடங்கப்படும் என்றும் மூன்றிலிருந்து நான்கு வருடத்தில் முழுதாக கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான திட்டமிடல் மற்றும் நிதி திரட்டல் போன்றவை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.