கேரளாவில் பள்ளி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பல் மற்றும் கல்வித் துறையின் முழு அதிகார அமைப்பு தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதாவது மாநிலத் தொடக்க பள்ளிகளில் ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரையும் மேல்நிலைப் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையும் இணைக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் ஐந்து முதல் ஏழாம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் தொழில் முறை தகுதி பெற்று இருக்க வேண்டும். மேலும் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் கட்டாயம் முதுகலை மற்றும் தொழில் முறை தகுதிகள் பெற்று இருக்க வேண்டும். இந்த புதிய ஆட்சேர்ப்பு திருத்தங்கள் ஜூன் ஒன்றாம் தேதி 2030 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.