அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் நான்கு நாட்கள் மருத்துவ ரீதியாக உயிரிழந்த நிலையில் இருந்து, பின்னர் அதிசயம் போல உயிர் பிழைத்து வந்த சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் மீண்டும் உயிர் பெற்ற பிறகு, “மறுவுலகம்” குறித்துப் பகிர்ந்துள்ள தகவல்கள் திகைப்பூட்டும் வகையில் உள்ளன.

மேலும் தான் இறந்திருந்த அந்த நான்கு நாட்களில், தனது உடல் எடையற்றது போல உணர்ந்ததாகவும், கண்ணைப் பறிக்கும் பிரகாசமான ஒளி வெள்ளத்தையும், சொல்லொணா அமைதியையும் அனுபவித்ததாக அவர் கூறுகிறார். நாம் வாழும் இந்த உலகைத் தாண்டி மற்றுமொரு உலகம் இருப்பதை அவர் மிகவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை குறித்து அவர் விவரிக்கும்போது, அங்கு காலம் என்ற ஒன்றே கிடையாது என்றும், நம்முடைய அன்புக்குரியவர்கள் அங்கு நம்மை வரவேற்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இது ஒரு மருத்துவ அதிசயம் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், ஆன்மீக ரீதியாகவும் அறிவியலாளர்கள் மத்தியிலும் இந்தத் தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உயிரிழந்த நிலையில் அவர் கண்ட அந்த “மறுபக்கக் காட்சிகள்” தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.