தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி மாணவர் சேர்க்கை காண விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க www.tnhealth.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விருப்பமுள்ள மாணவ மாணவிகள் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இதற்கு முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் வெளியானது முதல் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது