நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்துகடந்த ஜூலை 12ஆம் தேதி வரை இளங்கலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர யார் யாருக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகின்ற ஜூலை 25ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த வருடம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் 580 ஆக இருந்த நிலையில் இந்த வருடம் பொது பிரிவுக்கு 600 முதல் 602 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
