இன்றைய காலகட்டத்தில் 2K கிட்ஸ் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஒரு சிலர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். அந்தவகையில் காதலர்கள் இருவர் பைக்கில் கட்டிப்பிடித்துக் கொண்டு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில்   இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

பைக்கின் பெட்ரோல் டேங்கில் இளம்பெண் அமர்ந்து கொள்ள, இளைஞர் பைக் ஓட்ட இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டே செல்கின்றனர். சாலையில் சென்ற சிலர் இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நடுரோட்டில் இப்படி அநாகரிகமாகவா நடந்துகொள்வது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.