பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேஷ் கேபி நாயக். இவருக்கு 35 வயது ஆகிறது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 45 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாயக்கை கடந்த 2022 ஆம் வருடம் திருமணம் முன்பதிவு இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு பேசி வந்தேன். நான் மருத்துவராக பணியாற்றி வருகிறேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார். அதனால் மைசூருக்கு சென்றேன். ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

புதுசாக கிளினிக் ஒன்றை தொடங்க உள்ளதாகவும் கூறினார். இதையெல்லாம் நம்பி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டோம். அதன்பிறகு கிளினிக் தொடங்க 70 லட்சம் லோன் வாங்கி கொடுக்குமாறு  கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் என்னை மிரட்டினார். அதன் பிறகு என்னிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளை அவர் எடுத்துக்கொண்டு சென்று விட்டார். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட வீட்டில் நாயக் தன்னுடைய கணவர் என்று கூறி ஒரு பெண் வந்துள்ளார்.

இதனால் பிரச்சனை பெரிதாக நாயக் எங்கு தெரியும் கிடைக்கவில்லை என்று அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் நாயக் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் கடந்த 10 வருடங்களில் 15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் முன்பதிவு இணையதளத்தில் மருத்துவராக, பொறியாளராக, ஆசிரியராக, தொழிலதிபராக பதிவு செய்து பல பெண்களை ஏமாற்றி மூன்று கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார் இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.