கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 79. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் காரணமாக இவர் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். கேரளாவின் முதல்வராக இரண்டு முறை இருந்துள்ளார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.