மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு வழங்கப்படுவது மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது ஊழியர்களுக்கு வருடத்திற்கு 14 கட்டாய விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மூன்று நாட்கள் விருப்பத்தின் பேரில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த நாள், புத்த பூர்ணிமா, கிறிஸ்துமஸ், தசரா, தீபாவளி, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் முகரமாகிய தினங்களில் கட்டாயமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் ஹோலி பண்டிகை, ராமநவமி, மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தேர் திருவிழா, பொங்கல் மற்றும் ஓணம் பண்டிகை ஆகிய பண்டிகை தினங்களில் மத்திய அரசு ஊழியர்கள் விருப்பத்தின் பேரில் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது