நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த திடீர் விலை ஏற்றத்தை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் தக்காளி திருட்டை தடுப்பதற்கு பவுன்சர்கள் நியமிப்பது தொடங்கி சலுகை அடிப்படையில் தக்காளியை இலவசமாக வழங்குவது வரை பல வினோத சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூரில் ஒரு ஷூகடை தன்னுடைய கடையில் ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையிலான காலணிகள் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதனைப் போலவே மத்திய பிரதேசம் மாநிலத்தில் அசோக் நகரில் மொபைல் போன் கடை உரிமையாளர் ஒருவர் ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.