சுப்மான் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சஇந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில் குறித்து ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது. சுப்மன் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அவர் எந்தப் போட்டியில் விளையாடுவார்? என்பது குறித்து பிசிசிஐ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

டெங்கு தொற்று காரணமாக சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சுப்மன் கில் விளையாட முடியவில்லை. டெங்குவால் பாதிக்கப்பட்ட கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பிளேட்லெட் எண்ணிக்கை சற்று குறைந்ததையடுத்து சுப்மான் கில் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சுப்மன் கில் தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவர் நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையை பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.   அவர் எந்த போட்டிக்கும் தகுதி பெறுவாரா என்பது இன்னும் தெரியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணி உலகக் கோப்பை பிரச்சாரத்திற்கு இது ஒரு பெரிய அடியாக கருதப்படுகிறது.

கடந்த அக்டோபர் 6-ம் தேதி சுப்மன் கில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அக்டோபர் 8-ம் தேதி முதல் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் கில்லுக்கு பதிலாக இஷான் கிஷான் சேர்க்கப்பட்டார். அந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக வந்த இஷான் 0 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் இஷான் கிஷன் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார் என தெரிகிறது.

தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இஷான் கிஷன் தொடரலாம் எனவும், அக்டோபர் 19 ஆம் தேதி பங்களாதேஷுக்கு எதிராக இந்தியா விளையாடும் நேரத்தில் சுப்மன் கில் சிறந்த நிலையில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஷுப்மான் கில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால், ருதுராஜ் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் முக்கிய அணியில் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகார்வப்பூர்வ தகவல் இல்லை..

சுப்மன் கில் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 66.10 சராசரி மற்றும் 102.84 ஸ்ட்ரைக் ரேட்டில் 1917 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 6 சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.