2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 23 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

காகிதம் இல்லா இ- பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது ? என்பது குறித்து முடிவு செய்யும். கடந்த ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் வரும்  19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்காக 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார். சென்னை சங்கமம் கலை விழா மேலும் எட்டு நகரங்களில் நடத்தப்படும் கிண்டியில் கருணாநிதி பேரில் பல்நோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் தமிழக அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி ஒதுக்கீடு 771 தொழிற்சாலைகளில் மக்களை தேடி மருத்துவ திட்டம் விரிவுபடுத்தப்படும்.