தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், மகாராஷ்டிரா அரசைப் பார்த்துத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விமர்சித்துள்ளார். மராட்டியத்தில் சுமார் 56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யவும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவும் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகளின் நலனை எப்படிக் காப்பது என்பதை மராட்டிய பா.ஜ.க. அரசைப் பார்த்து இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள நயினார் நாகேந்திரன், மாற்று சக்தி என்று வீணாக முழங்குவதை விட்டுவிட்டு, மற்ற மாநிலங்களைப் பார்த்து நல்ல முயற்சிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா அரசைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே!
மகாராஷ்டிராவில் சுமார் 56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், முறையாக பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000… pic.twitter.com/qMgA3oYgts
— Nainar Nagenthran (@NainarBJP) June 3, 2026
“>
மேலும், தமிழக விவசாயிகளின் துயர் துடைக்கும் விதமாக, ஏற்கனவே அறிவித்த ஏமாற்றுத் தள்ளுபடியைத் திரும்பப் பெற்று, கொடுத்த வாக்குறுதியின்படி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
