தமிழக அரசியல் களத்தில் சமீபத்திய மாற்றங்கள் விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது பெட்டி படுக்கையுடன் தவெக பக்கம் செல்ல தயாராகிவிட்டதாக அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.

மேலும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய்யை பேரறிஞர் அண்ணாவுடன் வைகோ ஒப்பிட்டுப் பேசுவதை ஏற்க முடியாது என்றும், வைகோவின் தற்போதைய செயல்பாடுகள் தவெகவை நோக்கியே நகர்வதை உணர்த்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், வைகோவின் அரசியல் பயணம் குறித்து காட்டமாகப் பேசிய மல்லை சத்யா, வைகோ நாடாளுமன்றத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றியதற்கும், அவரது மகன் துரை வைகோ மக்களவை உறுப்பினரானதற்கும் திமுகவே காரணம் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் சுயமரியாதை பற்றிப் பேசும் வைகோ, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன், திமுக ஆட்சியில் இல்லாததால் தற்போது வைகோ அவதூறு பரப்புவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.