சென்னையில் நடைபெற்ற அரசு கல்வித் திட்டத் தொடக்க விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதால், குழந்தை பிறந்து 10 நாட்களேயான நிலையிலும் மருத்துவர்களின் அறிவுரையை மீறி இந்த கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததாக எம்.எல்.ஏ. பல்லவி தெரிவித்தார்.
ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பின் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காத மேயர் பிரியா, தாம் வருவதை அறிந்து திட்டமிட்டே அங்கு வந்து, கவுன்சிலர்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவர்களை முன்னிறுத்தி தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
குத்துவிளக்கு ஏற்ற மெழுகுவர்த்தியை தர மறுத்த மேயர் பிரியா…சட்டென தவெக MLA செய்த செயல்..!!#MayorPriya #TVKMla #MayorvsMLA #MLAPallavi #DMKvsTVK #GovtSchool #Newstamil24x7 pic.twitter.com/ubdHGa8bri
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) June 4, 2026
இருப்பினும், இந்த சம்பவத்தை தான் ஒரு அவமானமாக கருதவில்லை என்றும், குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் நல்நோக்க திட்டத்தினால் யார் தொடங்கி வைத்தாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் எம்.எல்.ஏ. பல்லவி விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நலனே முக்கியம் என்பதால் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் தாம் அங்கிருந்து கண்ணியத்துடன் நகர்ந்துவிட்டதாகக் கூறிய அவர், மேயர் தரப்பின் அரசியல் மோதல் போக்கு பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்ததாகவும் வருத்தம் தெரிவித்தார். இந்த விவகாரம் தற்போது சென்னை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னதாக நிகழ்ச்சியில் மேயர் பிரியாவுக்கு பின்பு நின்றன எம்எல்ஏ பல்லவி ரிப்பன் வெட்டிய நிலையில் குத்துவிளக்கு ஏற்றும் போது முதலில் விளக்கேற்றிய ப்ரியா எம்எல்ஏ பல்லவிக்கு கொடுக்காமல் ஐஏஎஸ் அதிகாரிக்கு கொடுத்தார். இதனால் தான் புறக்கணிக்கப்பட்டதாக கருதி எம்எல்ஏ பல்லவி அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். மேலும் தனக்கு குழந்தை பிறந்து பத்து நாள் தான் ஆவதாகவும் மருத்துவர்களின் அறிவுரையை மீறி இந்த நிகழ்ச்சியில் வந்திருந்தோம். ஆனால் மேயர் பிரியா அங்கிருந்து அனைவருக்கும் முன்னிலையிலும் என்னை அசிங்கப்படுத்தி விட்டார் என்றார். ஆனால் மேயர் பிரியாவோ புறக்கணிக்கவில்லை என்றும் முதலில் நான் அடுத்த ஐஏஎஸ் அதிகாரி மூன்றாவது தான் எம்எல்ஏ விளக்கேற்றுவது மரபு என்றும் அது அவருக்கு தெரியவில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
