மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் திறந்திருந்த கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீல நிற டீ-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்த அந்தப் பெண், சாலையோரம் இருந்த அந்தத் திறந்த நிலையைத் தவிர்க்க முயன்று கவனமாக நடக்க முற்பட்டார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக ஒரு காலை அந்தத் தொட்டியின் ஓரத்தில் வைத்தபோது நிலைதடுமாறி பாதி உடல் உள்ளே சென்ற நிலையில் சிக்கிக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடி வருவதற்கு முன்பே, அந்தப் பெண் சுதாரித்துக்கொண்டு சுயமாக வெளியே வந்து உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவம் இணையதளத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் நடக்கும் சாலையில் எச்சரிக்கை பலகையோ அல்லது மூடியோ இல்லாமல் கழிவுநீர் தொட்டியைத் திறந்து வைத்தது மாநகராட்சியின் அலட்சியம் எனப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதே சமயம், சாலையில் நடக்கும்போது மக்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

“>

 

இதுபோன்ற ஆபத்தான குழிகளை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் சாலையில் செல்லும்போது விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.