சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான உணவு வகைகள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் ஊற்றித் தயாரிக்கப்பட்ட ஆம்லெட் வீடியோ ஒன்று இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு நபர் கடைக்காரரிடம் ஸ்ட்ராபெர்ரி ஜூஸைக் கொடுத்து, அதில் ஆம்லெட் செய்யச் சொல்கிறார். அந்த கடைக்காரரும் எண்ணெய் அல்லது வெண்ணெய்க்குப் பதிலாக, வாணலியில் ஜூஸை ஊற்றி அதில் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றி ஆம்லெட் செய்கிறார்.
தக்காளி மற்றும் சாஸ் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட இந்த விசித்திரமான ஆம்லெட் வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வினோதமான உணவுச் சேர்க்கையைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
“இதைப் பார்த்தாலே வாந்தி வருகிறது” என்றும், “இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது” என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
புதுமை என்ற பெயரில் உணவை வீணடிப்பதாகப் பலரும் இந்த வீடியோவிற்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
