அதிக தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் நிறுவனம் (ரூ. 1,368 கோடி) முதலிடம் பிடித்துள்ளது. அதில் அந்நிறுவனம் அதிகபட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.542 கோடியும், திமுகவுக்கு ரூ.503 கோடியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.154 கோடியும், பாஜகவுக்கு ரூ.100 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 கோடியும் நன்கொடையாக அளித்துள்ளது. பாஜகவுக்கு அதிக நன்கொடையளித்த நிறுவனங்களில், ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் (ரூ.584 கோடி) முதலிடத்தில் உள்ளது.