தர்மபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஷகிரா. இத்தம்பதிக்கு சந்தர், லூர்து என இரண்டு மகன்கள் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த தம்பதி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் சமாதானமாகி சேர்ந்து வாழ துவங்கினர். அப்போது கணவன் மனைவியிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முரளி 24/08/2017 ஆம் ஆண்டு தனது இரண்டு மகன்களுக்கும் பூச்சி மருந்தை கொடுத்ததோடு தானும் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் சந்தர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் முரளியும் லூர்துவும் சிகிச்சைக்கு பின் உயிர் தப்பினர். இது தொடர்பான வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து மகனை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், மற்றொரு மகனை கொலை செய்ய முயற்சித்ததற்காக  ஐந்து வருடம் சிறை தண்டனையும் ஐந்தாயிரம் அபராதமும், தற்கொலை செய்ய முயற்சிதற்காக ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.