நிலம் என்பது தவிர்க்க முடியாத மூலதனமாக மாறிவிட்டது. ரியல் எஸ்டேட் பெருகிவிட்ட காலகட்டத்தில் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. சொந்த ஊரிலே நிலம் வாங்க வேண்டும் எனப் பலரும் வாழ்நாள் முழுக்க உழைத்து வரும் நிலையில்  திருமணத்திற்கு முன் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, மேற்கு வங்கத்தை சேர்ந்த  சஞ்சய் என்ற நபர் நிலாவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி, பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள Luna Society International அமைப்பின் மூலமாக 7,10,000க்கு ஒரு ஏக்கர் நிலத்தை பதிவு செய்துள்ளார். மேலும், இந்தியாவின் வரலாற்று வெற்றியை ‘சந்திரயான் 3’ பதிவு செய்திருக்கிறது. விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.