சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்ததை எதிர்த்து மறு விசாரணைக்கு ஏற்றுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

அதிமுக மற்றும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக விடுவிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் விடுதலை செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து வருகிறார். இதுவரை நான்கு வழக்குகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பொன்முடி,  தங்கம் தென்னரசு,  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்பான வழக்குகளை எடுத்து உத்தரவு பிறப்பித்து, நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று புதிதாக இரண்டு வழக்குகளை எடுத்திருக்கிறார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி  அவர்கள் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக  இருந்த கணேசனுக்கு வீட்டை வழங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து,  இந்த உத்தரவை  மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.