மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், துபாயிலிருந்து இந்தியா திரும்ப வேண்டிய விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் துபாய் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். ஹோட்டல் முன்பதிவுகள் முடிந்துவிட்டதாலும், போதிய பணவசதி இல்லாததாலும் குழந்தைகளுடனும், முதியவர்களுடனும் பலர் தங்குவதற்கு இடமின்றி நடுத்தெருவில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டது.

​இந்தத் தகவலையறிந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் யோகேஷ் தோஷி, உடனடியாகக் களமிறங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தனக்குச் சொந்தமான 64 குடியிருப்புகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தை, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்காக முழுமையாகத் திறந்துவிட்டுள்ளார். தங்குவதற்கு இடம் மட்டுமின்றி, அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் இலவசமாகச் செய்து கொடுத்துள்ளார்.

தற்போது 125-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அந்தக் குடியிருப்புகளில் பாதுகாப்பாகத் தங்கியுள்ளனர். “சொந்த நாட்டு மக்கள் துயரத்தில் இருக்கும்போது வேடிக்கை பார்க்க முடியாது” என யோகேஷ் செய்துள்ள இந்த மனிதாபிமானச் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.