உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில், ஒரு விவசாயிக்கும் அவரது வளர்ப்பு நாய்க்கும் இடையிலான அபூர்வ பாசம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக, அந்த நபர் தனது மாட்டு வண்டியில் வயலுக்குச் செல்லும் போதெல்லாம், அவரது நாயும் அவருடன் வண்டியிலேயே அமர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நீண்ட காலப் பயணம் அந்தப் பகுதியில் ஒரு அழகான அடையாளமாகவே மாறிவிட்டது.
விவசாயி எங்கு சென்றாலும் நிழல் போல பின்தொடரும் அந்த நாய், வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு ராஜா போல வயலுக்குச் செல்கிறது. வேலை முடிந்து வீடு திரும்பும் வரை தனது எஜமானருக்குத் துணையாக அங்கேயே இருக்கிறது.
<a href=”http://
मालिक और डॉग का अनोखा याराना, 14 साल से बुग्गी पर साथ जाते हैं खेत
यूपी के मुजफ्फरनगर के पीपलहेड़ा गांव में एक किसान और उसके डॉग के बीच खास रिश्ता है. डॉग पिछले 14 सालों से बुग्गी पर बैठकर मालिक के साथ-साथ खेत जाता है.#Muzaffarnagar #DogLover #HumanAnimalBond #ViralVideo pic.twitter.com/2VQfzjM2nY
— NBT Hindi News (@NavbharatTimes) April 28, 2026
“>
ஒரு மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான இந்த 14 ஆண்டுகால மாறாத நட்பு, உண்மையான பாசத்திற்கு மொழி தேவையில்லை என்பதைஅந்த கிராம மக்களுக்கு உணர்த்தி வருகிறது.
