சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, மனிதநேயம் மரித்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வீட்டின் வாசலில் பிச்சை கேட்க வந்த முதிய பெண்மணி ஒருவரை, அங்கிருந்த நபர் ஒருவர் தண்ணீர் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டும் கொடூரக் காட்சி இடம் பெற்றுள்ளது.
அந்தப் பெண் நனைந்தபடி தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றும், இரக்கமின்றி அவர் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இந்த அநாகரீகமான செயல் நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த பலரும், “உங்களால் கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ஒரு ஏழையை இப்படி அவமானப்படுத்தாதீர்கள்” என்று தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். “இன்று நீங்கள் கொடுப்பவராகவும் அவர் கேட்பவராகவும் இருக்கலாம், ஆனால் காலம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்” என்று பலரும் அந்த வீட்டு உரிமையாளருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
आपके द्वार पर कोई मांगने गया है, नहीं दे सकते तो ऐसी हरकत भी नहीं करनी चाहिए किसी गरीब के साथ…।😡
किस्मत का खेल है साहब, आज आप देने वाले हैं और वो माँगने वाला… कल वक्त बदल भी सकता है। pic.twitter.com/Nd9ZjlUPoJ
— Shagufta khan (@Digital_khan01) January 6, 2026
“>
வறுமை என்பது ஒருவரின் சாபமல்ல, அது ஒரு சூழ்நிலை என்பதை உணர்ந்து, குறைந்தபட்ச மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
