சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெடுஞ்சாலையில் ஒரு பெண்ணும் இரண்டு இளைஞர்களும் இணைந்து, அதிவேகமாக வரும் லாரிக்கு மிக அருகில் நின்று ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோ எடுக்க முயன்றுள்ளனர். உயிரைப் பணையம் வைத்து அவர்கள் செய்த இந்தச் செயல், நூலிழையில் பெரும் விபத்தாக மாறவிருந்தது.
<a href=”http://
अभी रील की जगह रेल बन जाती 🤓 pic.twitter.com/K1MAyCWFBc
— Professor of memes (@prof_desi) January 5, 2026
“>
லாரியின் வேகத்தை உணராமல் சாலையின் நடுவே அவர்கள் நின்றிருந்த காட்சி, சமூகப் பொறுப்பற்றத் தன்மையின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.
எதிரே வருவது லாரி என்று தெரிந்தும் அவர்கள் விலகாமல் இருந்த நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த லாரி ஓட்டுநர், அந்த இளைஞர்களை எச்சரிக்கும் விதமாக ஸ்டீயரிங்கை அவர்கள் திசையில் லேசாகத் திருப்பியுள்ளார்.
இதனால் நிலை குலைந்த மூவரும், மரண பயத்தில் தலைதெறிக்க ஓடி சாலையோரம் இருந்த பாதுகாப்பு வேலியில் ஏறி உயிர் தப்பினர். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்த ‘ரீல்ஸ்’ வீடியோ அவர்களின் வாழ்க்கையையே முடித்திருக்கும் என்று வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் நிலையில், “புகழுக்காக உயிரை அடமானம் வைக்காதீர்கள்” எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
